News April 14, 2025
நீர் நிலைகளில் பத்திரமாக இருங்கள்

பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
Similar News
News December 8, 2025
கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News December 8, 2025
₹827 கோடியை Refund செய்த இண்டிகோ!

விமான சேவை ரத்து, தாமதத்தால் நெருக்கடியில் சிக்கியுள்ள இண்டிகோ, டிக்கெட் தொகையை திரும்ப வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் சுமார் 9.5 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இண்டிகோ இதுவரை ₹827 கோடி தொகையை திரும்ப வழங்கியுள்ளது. தொலைந்துபோன 9,000 லக்கேஜ்களில், 4,500 பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அடுத்த 36 மணி நேரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது.
News December 8, 2025
₹888 கோடி ஊழல் அமைச்சரை காப்பாற்றும் ஸ்டாலின்: EPS

அமைச்சர் நேரு தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% – 10% வரை கமிஷன் அடித்துள்ளது <<18501393>>ED-ன் கடிதத்தில் <<>>தெரியவந்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே ED அனுப்பிய ₹888 கோடி Cash For Jobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரை ஸ்டாலின் காப்பாற்றி வருவதாகவும் சாடியுள்ளார். கொள்ளையடித்த காசில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் எனவும் விமர்சித்துள்ளார்.


