News April 8, 2024
அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் (3)

அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் 6ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 29 தொகுதிகள் உள்ளன. இதையடுத்து 7ஆவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 28 தொகுதிகளும், 8ஆவது இடத்தில் உள்ள குஜராத்தில் 26 தொகுதிகளும், 9ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் தலா 25 தொகுதிகளும் உள்ளன. 10ஆவது இடத்தில் ஒடிசாவும் (21 தொகுதிகள்), 11ஆவது இடத்தில் கேரளாவும் (20 தொகுதிகள்) உள்ளன.
Similar News
News March 25, 2026
திமுக நட்சத்திர தொகுதியில் செல்வப்பெருந்தகை

சென்னை எழும்பூர் தொகுதியில் (தனி) செல்வப்பெருந்தகை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட அவர் 10,789 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை ஸ்ரீபெரும்புதூரை விசிகவுக்கு ஒதுக்க இருப்பதால், செல்வப்பெருந்தகை எழும்பூருக்கு மாறவிருக்கிறாராம். எழும்பூர் திமுகவின் கோட்டை, இத்தொகுதியில் 1957 – 2021 வரை 12 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது.
News March 25, 2026
சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை: வேல்முருகன்

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், தன்னுடன் இருக்கும் சில அமைப்புகளை வைத்து தனி அணியாக போட்டியிட திட்டம் என கூறியிருந்த நிலையில், திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது இந்த முடிவால் தவாகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
News March 25, 2026
‘மாம்பழம்’ சின்னம் வழக்கு: அன்புமணிக்கு புதிய உத்தரவு

பாமக தலைவராக தன்னை அறிவிக்கும் வரை மாம்பழ சின்னத்தை முடக்கி வைக்குமாறு ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், நாளை இருதரப்பு வாதங்களையும் கேட்கப்போவதாக கூறியுள்ளது. மேலும், நாளைக்குள் அன்புமணி தரப்பு சின்னம் குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டுள்ளார்.


