News August 10, 2025
மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை: அன்புமணி

மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்றும் அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் எனவும் சாடியுள்ளார். தமிழக அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.
Similar News
News August 10, 2025
சஞ்சுவின் கம்பேக்கிற்கு காரணம் யார் தெரியுமா?

T20-யில் தான் கம்பேக் கொடுக்க கம்பீர்தான் காரணம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் டக் டவுட் ஆகி சோகமாக இருந்த போது கம்பீர் தன்னிடம் பேசியதை, சஞ்சு அஸ்வினுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார். நீங்கள் 21 டக்கவுட் ஆனால்தான் அணியில் இருந்து நீக்குவேன் என அவர் சஞ்சுவிடம் கூறினாராம். கம்பீரின் அதீத நம்பிக்கையால் சஞ்சு அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தியும் இருந்தார்.
News August 10, 2025
இயக்குநர் அவதாரம் எடுக்கும் கருணாஸ் மகன்?

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் கருணாஸ் மகன் கென். வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் கென் கருணாஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கென், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்நிலையில் கருணாஸ் தயாரிக்க, கென் ஒரு படத்தை இயக்க போகிறாராம். விரைவில் அறிவிப்பு வருமாம்.
News August 10, 2025
சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து?

சிக்கன் இறைச்சியை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்: உங்கள் எலும்புகளும் தசைகளும் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனநிலை சீராகும். அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி, இன்பெக்ஷன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.