News June 27, 2024
ஸ்டேட் பேங்க் தேர்வு முடிவுகள் வெளியானது

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 மற்றும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை <
Similar News
News March 4, 2026
சிலரின் தோல்விகளை மறைக்கவே போர்: ஸ்பெயின்

போர் வேண்டாம் என்ற நிலைபாட்டில் ஸ்பெயின் அரசும், மக்களும் உள்ளதாக அந்நாட்டின் PM பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். <<19293932>>ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக டிரம்ப்<<>> அறிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோ, ஈரான் மீதான போர் மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரழிவிற்கான தொடக்கம் என்றும், சில அதிபர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க போரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.
News March 4, 2026
சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
திமுக காங்கிரஸ் இழுபறி இன்று முடிவுக்கு வருமா?

திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பெரும் இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேசி வருவதாக செய்தி வெளியானதால் அக்கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் திமுக – காங்., பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 29 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


