News April 15, 2025
‘மாநில சுயாட்சி’ தீர்மானம் இன்று தாக்கல்

சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
Similar News
News November 15, 2025
5.90 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்: ECI

தமிழகத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் SIR படிவங்கள் 5.90 கோடி பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 92.04% பேருக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.4 வரை SIR படிவங்கள் வழங்கப்படும்.
News November 15, 2025
பிஹார் வெற்றி நியாயமானதா?: கமல்ஹாசன்

பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் வெற்றியை கொண்டாடுவதில் தவறில்லை என்று கூறிய கமல்ஹாசன், இந்த வெற்றி நியாயமாக பெறப்பட்டதா என்பதை நாம் ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். SIR பணிகளை சரிபார்ப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக கூறிய கமல், தன்னால் முடிந்ததை தனது எல்லைக்குள் செய்து வருவதாக குறிப்பிட்டார்.
News November 15, 2025
கேப்டனாக ருதுராஜ் தொடர்வார்: CSK

CSK கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என அணி நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிரேட் மூலம் ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்கியதால், அவர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக CSK அணி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது தலைமையில் கடந்த 2 சீசன்களாக CSK பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இந்த முடிவு சரியானதா?


