News April 17, 2025
மாநில சுயாட்சி இதற்குத்தான் தேவை: CM ஸ்டாலின்

மாநில சுயாட்சி ஏன் அவசியம் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது எனவும், மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க அண்மையில் அவர் குழு அமைத்திருந்தார்.
Similar News
News October 24, 2025
உருவானது புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், புயல் சின்னத்தால் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்.28 வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 24, 2025
தீபாவளி சோகம்: 30 குழந்தைகள் பார்வை இழப்பு?

தீபாவளியில் கார்பைடு துப்பாக்கி வைத்து கொண்டாடிய 30 குழந்தைகள் <<18082464>>பார்வையை இழக்கும்<<>> அபாயம் உள்ளதாக ம.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 30 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 300 பேர் தீவிர கண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று 14 குழந்தைகள் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
News October 24, 2025
நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டாரா?… CLARITY

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. அவரது மகள் ஜோவிடாவின் இன்ஸ்டா பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததே அதற்கு காரணம். தந்தை லிவிங்ஸ்டனுடன் இருக்கும் வீடியோவை ஜோவிடா பதிவிட, ‘உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என அவர் கேட்டார். இதனால் கடுப்பான ஜோவிடா, நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக அல்லவா நினைத்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்.


