News February 25, 2025
உலகளவில் ஊழியர்களை நீக்கும் ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 1,100 கார்ப்பரேட் ஊழியர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. யாரெல்லாம் நீக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இன்று மதியம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப மாட்டோம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் காபி பார்களில் பணிபுரியும் பாரிஸ்டாக்கள் பணிநீக்கத்தில் சேர்க்கப்படவில்லை.
Similar News
News February 25, 2025
ஜீவாவுக்கு ராஷி கன்னா செய்த சத்தியம்

பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ராஷி கன்னா பிராமிஸ் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘அகத்தியா’ பட புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இப்படத்திற்காக இயக்குநர் பா.விஜய் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 25, 2025
மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை: அதிகாரிகள் தகவல்

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டப்பட்டதில் மேற்பகுதி இடிந்து விழுந்து, பொறியாளர்கள் உள்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 4வது நாளாக நடக்கும் மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தொடர்கிறது.
News February 25, 2025
ரூ.65 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது. ஜன. 1இல் 1 கிராம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200ஆகவும் இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து பிப். 1இல் 1 கிராம் ரூ.7,790ஆகவும், ஒரு சவரன் ரூ.62,320ஆகவும் உயர்ந்தது. பின்னர் பிப்.15இல் 1 கிராம் ரூ.7,890ஆகவும், சவரன் ரூ.63,120ஆகவும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று 1 கிராம் ரூ,8,075ஆகவும், சவரன் ரூ. 64,600ஆகவும் அதிகரித்துள்ளது.