News July 4, 2025
ஸ்டார் வார்ஸ் நடிகர் கென்னத் கோலி காலமானார்

‘The Empire Strikes Back’, ‘Return of the Jedi’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகர் கென்னத் கோலி(87) காலமானார். கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. Star Wars படங்களின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற கென்னத் கோலிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
2-வது டெஸ்ட்: 407 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 407 ரன்களில் ஆல் அவுட்டானது. முதலில் தடுமாற்றத்துடன் தொடங்கிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக்(158) மற்றும் ஜேமி ஸ்மித்தின்(184) 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் சரிவில் இருந்து மீட்டது. இந்த பார்ட்னர்ஷிப் உடைந்த பின் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
News July 4, 2025
ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.