News May 20, 2024

ரோஹித் கருத்துக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளக்கம்

image

ரோஹித் ஷர்மாவின் உரையாடல் எதையும் பதிவு செய்யவில்லை என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. தனது உரையாடலை அனுமதியின்றி வெளியிட்டதாக அந்நிறுவனம் மீது ரோஹித் ஷர்மா நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், ரோஹித் ஷர்மா பேசியது வீடியோவாக பதிவானதே தவிர, ஆடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், தங்கள் நிறுவனம் வீரர்களின் உரிமைகளுக்கு மரியாதையளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

நமது நாட்டின் இறக்குமதி எவ்வளவு தெரியுமா?

image

இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகமாக உள்ளது. 2024 நிலவரப்படி, ஏற்றுமதி – இறக்குமதியில் இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா எந்த நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? COMMENT & SHARE

News November 19, 2025

விடுமுறை.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளை TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நவ.21 அன்று 340 பேருந்துகளும், நவ.22 அன்று 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், ஈரோடு, திருப்பூர், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இங்கே <>கிளிக்<<>> செய்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

News November 19, 2025

3.5 பில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் ஆபத்தில் உள்ளதா?

image

தரவு கசிவு காரணமாக வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை ஆபத்தில் இருப்பதாக வியன்னா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள பெரிய பாதுகாப்பு குறைபாட்டை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உலகளவில் 3.5 பில்லியன் பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரத் தகவல் கசியும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், ஹேக்கிங் செய்யாமலேயே எளிதாக திருடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!