News May 11, 2024

முதல் நாளில் ₹5 கோடி வசூலித்த ‘ஸ்டார்’

image

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளான நேற்று, தமிழகத்தில் ₹4 கோடியும், உலகம் முழுவதும் ₹5 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதுவே கவின் நடித்த படங்களில், அதிகபட்ச முதல் நாள் வசூலாகும். நடிகராக ஆசைப்படும் ஒரு இளைஞன், தனது பயணத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்களை இப்படம் உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கிறது.

Similar News

News September 20, 2025

சற்றுநேரத்தில் விஜய் கட்சியில் இணைகிறாரா காளியம்மாள்?

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அடுத்து எந்த கட்சியில் இணையபோகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாகையில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் முன்னிலையில், தவெகவில் அவர் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர் தவெகவில் இணைந்தால், 2026 தேர்தலில் நாகையில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News September 20, 2025

டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

image

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? ஆனால் 1 மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.

News September 20, 2025

ரோபோ சங்கர் கடைசியாக பேசிய வார்த்தை.. கண்ணீர்

image

மறைவதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசியது குறித்து அவரது அண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். எப்போது கேட்டாலும் தூக்கம் வரலைனுதான் சொல்வான். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றாலும் 4 மணிக்கு எந்திரிச்சு, தூக்கமே வரலைனு TV-ய போட்டு உட்காருவான். ஆனால், அன்று ( ஹாஸ்பிடலில் சேர்த்தநாள்) கடைசியா எனக்கு தூக்கம் வருது; நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என சொன்னான்; அதன்பின் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!