News March 29, 2024
40 தொகுதிகளிலும் ஸ்டாலினின் அலை வீசுகிறது

தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் அலைதான் வீசுகிறதென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார்.
Similar News
News December 7, 2025
மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
News December 7, 2025
₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: CM

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அவர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை என்று தெரிவித்த CM, நாட்டிலேயே பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.
News December 7, 2025
தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியம்: வந்தது எச்சரிக்கை

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓரிடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 6 வயது முதல் பெரியவர்கள் வரை ப்ளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது. பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.


