News March 28, 2024
ஸ்டாலினின் தூக்கம் போய்விட்டது

அதிமுகவால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் தூக்கம் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பல்வேறு வரிகளை உயர்த்தியும் திமுக அரசு இன்னமும் கடனில் தான் உள்ளது. பட்டாசுத் தொழில் கடுமையாக நலிந்துவிட்ட போது, நீங்கள் நலமா என்று ஸ்டாலின் கேட்கிறார். பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிமுக போராடியது’ என்றார்.
Similar News
News March 7, 2026
கட்சி மாறியது ஏன்? OPS

கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை EPS திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக OPS குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவை வஞ்சகமாக EPS அபகரித்துக் கொண்டதாகவும் சாடியுள்ளார். ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கு இலக்கணமாக, தன்னை ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
சுந்தர் பிச்சைக்கு ₹6,361 கோடி சம்பளம்!

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு $692 மில்லியன் (₹6,361 கோடி) சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 2004-ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆக பதவியேற்றார். அதன்பிறகு கூகுள் சந்தை மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது. தற்போது AI தொழில்நுட்ப போட்டியிலும் கூகுள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
News March 7, 2026
விவாகரத்து பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்: விஜய்

முதல்முறையாக விவகாரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் பேசியுள்ளார். ஏற்கெனவே உள்ள நிறைய பிரச்னைகளில் சமீபத்தில் மேலும் ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்கள் போராடி வருத்தப்படுவதை பார்த்து நானும் வருந்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நல்லதே நடக்கும் என்றும் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் விஜய் பேசினார்.


