News August 29, 2025
உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவோம்: CM அழைப்பு

அனைத்து மாநில முதல்வர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் CM ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மத்திய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து கூட்டாட்சியை அடிப்படையாக கொண்ட நாட்டை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 29, 2025
2026-ல் அம்மா மாடல் ஆட்சி: EPS

மக்களை காப்போம், தமிழகம் மீட்டோம் பயணத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளதாக EPS தெரிவித்துள்ளார். 40 நாள்கள் பயணத்தில் 118 தொகுதிகளில் 60 லட்சம் மக்களை சந்தித்தாகவும், அதற்கு கிடைத்த ஆதரவை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது பயணம் தொடரும் என்றும், 2026-ல் விளம்பர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவேன் எனவும் சபதமிட்டுள்ளார்.
News August 29, 2025
விளம்பரத்திற்காக செயல்படும் திமுக அரசு: அன்புமணி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். நம்பிக்கையுடன் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று என அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இது ஊரை ஏமாற்றும் திட்டம் எனவும், விளம்பரத்திற்காக செயல்படும் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் சாடியுள்ளார்.
News August 29, 2025
வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்?

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் செப்.17 வரை லட்சுமி மேனன் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், கைதாகியுள்ள 3 பேரில் மிதுன் மோகன் என்பவர் கூலிப்படையை சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய அவருக்கு, லட்சுமி மேனனுடன் எப்படி தொடர்பு என போலீஸ் விசாரித்து வருகிறது.