News April 6, 2024
ஸ்டாலின் மைத்துனர் காலமானார்

முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் லெனின், உடல்நலக் குறைவால் காலமானார். திமுகவின் அங்கமாக இருந்து வந்த லெனின் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
Similar News
News August 11, 2025
பழைய ஓய்வூதிய திட்டம்: கருத்து கேட்கும் TN அரசு

வரும் 18-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 11, 2025
பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
ஆண்டில் 300 நாள்கள் தூங்கும் மனிதர்

நல்ல தூக்கத்துக்காக பலர் ஏங்க, ராஜஸ்தானை சேர்ந்த புர்க்காராமுக்கு (46) தூக்கமே சாபமாகிவிட்டது. தன் 23-வது வயது முதல் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட இவரால், ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விழித்திருக்க முடிகிறது. மீதி 25 நாள்கள் தொடர்ச்சியான தூக்கத்தில் கழிகிறது. இவர் தூக்கத்தில் இருக்கையில், குடும்பத்தினரே அவருக்கு உணவூட்டுவது, குளிக்க வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர்.