News August 19, 2024

உணர்ச்சி வசப்பட்டார் ஸ்டாலின்

image

பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். EPS போல் ஊர்ந்துசென்று பதவி வாங்கும் அவசியம் DMKக்கு இல்லை என கூறிய அவர், DMK எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என, இந்திரா காந்தி கூறியதையும் நினைவுகூர்ந்தார். நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என அண்ணா மீது ஆணையிட்டு அவர் உணர்ச்சி வசப்பட்டார்.

Similar News

News March 23, 2026

புதுக்கோட்டை: கள் விற்ற 3 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேல புள்ளான்விடுதி பகுதியில், நேற்று (மார்ச் 22) “கள்” சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றை விற்ற ராஜபாளையத்தை சேர்ந்த தங்கசாமி (58), வடகாடு சேர்ந்த பிரபு (58), ஆலங்குடி சேர்ந்த கரிகாலன் ஆகியோரை கைது செய்து, அவரிடம் வடகாடு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News March 23, 2026

வைகோவே நேரடியாக களத்தில் இறங்குகிறாரா?

image

மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அதில் 3-ல் உதயசூரியன் சின்​னத்​தி​லும், 1 தொகுதியில் தனி சின்​னத்​தி​லும் மதி​முக போட்​டி​யிட உள்​ளது. இந்நிலையில், தனி சின்​னத்​தில் போட்​டி​யிடும் தொகுதியில் நிச்​ச​யம் வெற்றிபெற வேண்​டும் என்ற அழுத்தம் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தொகுதியில் வைகோவே போட்​டி​யிட வேண்​டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

News March 23, 2026

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

error: Content is protected !!