News June 16, 2024
அகிலேஷ் யாதவுக்கு ஸ்டாலின் நன்றி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய அகிலேஷ் யாதவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். MBBS, BDS போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்நிலையில், நடப்பாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.
Similar News
News November 13, 2025
மேகதாது வழக்கில் திமுக அரசு வலுவாக வாதிடவில்லை: EPS

<<18274942>>மேகதாது அணை <<>>வழக்கில் திமுக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை என்று EPS குற்றஞ்சாட்டியுள்ளார். அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு SC அனுமதி அளித்தது அதிர்ச்சியை தருவதாக அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தங்களது குடும்ப தொழிலை காக்கும் நோக்கில் திமுக ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவாகவே, இதுபோன்ற தீர்ப்பு வந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
News November 13, 2025
எனக்கு 108, உனக்கு 107… உலகின் வயதான தம்பதியர்

உலகில் வாழ்ந்துவரும் வயதான தம்பதியர் என்ற பெருமையை பெற்றுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த லைல் கிட்டன்ஸ் (108)- எலினார்(107) தம்பதியர். 1942-ல் திருமணம் செய்த அவர்கள் 83 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இனிய திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு, ‘நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம்’ என்று சிம்பிளாக சொல்லிவிட்டு சிரிக்கின்றனர். இவர்களை வாழ்த்தி லைக் செய்யலாமே!
News November 13, 2025
சுகர் இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

சுகர் இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர்கள் சொல்கின்றனர். எந்த வகை நீரிழிவு நோய் இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு சரியான அளவில் இன்சுலின் உற்பத்தியாகிறதாம். இதனால் எதிர்காலத்தில் குழந்தைக்கு டைப் 2 டயாபடிஸ் வருவதற்கான வாய்ப்பும் குறைவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த தகவலை தாய்மார்களுக்கு SHARE பண்ணுங்க.


