News April 26, 2024
ஓய்வெடுக்க மாலத்தீவு செல்லும் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒருவார பயணமாக ஏப். 29ஆம் தேதி மாலத்தீவு செல்லவுள்ளார். குடும்பத்தினருடன் செல்லும் அவர், அரசுப் பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
ரயில் லேட்டானால் ஃப்ரீ சாப்பாடு கிடைக்கும் தெரியுமா

இந்தியாவில் ரயில்கள் தாமதமாக ஓடுவது வழக்கமே. ஆனால், IRCTC விதிகளின் படி, ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு அல்லது சிற்றுண்டி வழங்கப்படும். இந்த வசதிகள் ராஜ்தானி, சதாப்தி & துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். காலையில் தாமதமானால் டீ, காபி & பிஸ்கட் வழங்கப்படும். மதியம் அல்லது இரவில் தாமதமானால் சாதம், பருப்பு & காய்கறிகள் உணவு வழங்கப்படும்.
News January 23, 2026
சேலை மடிப்பில் இதயங்களை நொறுக்கும் கயாது ❤️❤️

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர் அடுத்ததாக ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இளைஞர் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் அவரின் போட்டோஸுக்கு எப்போதுமே SM-ல் ஹார்ட்டின் பறக்கும். அப்படி சேலையில், மென்மையான சிரிப்புடன் அவர் பகிர்ந்துள்ள ரீசண்ட் கிளிக்ஸ் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் நெஞ்சத்தை பறிகொடுக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்யுங்கள்.
News January 23, 2026
தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


