News September 24, 2024

தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் ஸ்டாலின்

image

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், குளோபல் செஸ் லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Similar News

News August 11, 2025

ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான்!

image

ஜப்பானில் அலுவலக பார்க்கிங் தொடர்பான ஒரு விதி, அவர்கள் ஏன் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அலுவலகத்துக்கு பணியாளர்கள், வேலை நேரத்துக்கு முன்பே வந்தால், அவர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் இடத்தில் தொலைவில் நிறுத்த வேண்டும். ஏன் தெரியுமா? தாமதமாக வரும் பணியாளர்கள், பார்க்கிங்கில் முன்புறம் காலியாக உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நேரத்துக்கு பணிக்கு வர இந்த ஏற்பாடாம்.

News August 11, 2025

மினிமம் பேலன்ஸை வங்கிகளே முடிவு செய்யலாம்: RBI கவர்னர்

image

அண்மையில் ICICI வங்கி, மினிமம் பேலன்ஸை ₹50,000-மாக <<17350157>>உயர்த்தியது<<>> வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மினிமம் பேலன்ஸ் நிர்ணயிப்பது அந்தந்த வங்கிகளின் விருப்பம். இது RBI வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என அரசு வலியுறுத்தும் நிலையில், மினிமம் பேலன்ஸை உயர்த்துவது சரியா?

News August 11, 2025

BREAKING: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

image

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!