News October 12, 2025
நரகத்தை பிரதிபலிக்கும் ஸ்டாலின், EPS ஆட்சி: சீமான்

10 லட்சம் கோடி கடன் பெற்று TN-ல் நிறைவேற்றிய ஒரு திட்டத்தையாவது ஸ்டாலின், EPS சொல்ல வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். நகரம் எப்படி இருக்கும் என்பதற்கு ஸ்டாலின், EPS ஆட்சியை உதாரணம் காட்டிய அவர், சொர்க்கத்திற்கு உதாரணமாக தான் தரப்போகிற ஆட்சியே சாட்சியாக இருக்கும் என்று கூறினார். பிரச்னைகளை பார்த்து படிப்பவர்களாக இருந்தால், அவர்கள் மக்களின் பக்கத்தில் இல்லை என்று அர்த்தம் என சீமான் பேசியுள்ளார்.
Similar News
News March 7, 2026
விஜய் மீண்டும் நடிப்பதே நல்லது: பாடகர் ஸ்ரீநிவாஸ்

விஜய் அரசியலில் நுழைந்தபோது புதுமையை வழங்குவார் என எதிர்பார்த்தேன்; ஆனால், தற்போது விஜய் முதலில் செய்ய வேண்டியது சொந்த பிரச்னையில் கவனம் செலுத்தி தீர்வுகான வேண்டும் என்பதுதான் என பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக வேண்டும் என்றால் தொலைநோக்கு திட்டங்கள் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், விஜய் மீண்டும் நடிப்பை தொடர்வதே சிறந்தது எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
News March 7, 2026
தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஈரான்

அண்டை நாடுகளை தாக்கியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகள் மீது இனி எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என கூறிய அவர், அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரானை தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் ஈரானை பணிய வைக்க முடியாது; அந்த கனவு அவர்களுடனேயே மண்ணுக்குள் போக வேண்டியதுதான் எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.


