News August 15, 2024
ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின்

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து, புத்தகம் ஒன்றை முதல்வர் பரிசளித்தார். ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் துரைமுருகன், உதயநிதி, ஓபிஎஸ், அண்ணாமலை, பிரேமலதா , ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 26, 2025
6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6 மிரட்டல் அடி

சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத் கேப்டன் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் மொத்தமாக 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119* ரன்களை குவித்தார். முதலில், சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது. உர்வில் படேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம், 12.3 ஓவர்களில் குஜராத் எளிதில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரிலும், உர்வில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
News November 26, 2025
வயதாகிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

வயதாகும்போது உங்கள் சருமம், ஆற்றல் மற்றும் செல்களை பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். இதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.
News November 26, 2025
GK வாசனின் தமாகாவில் ஐக்கியமானது காமக

காமராஜர் மக்கள் கட்சியை(காமக), ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் இணைத்துள்ளார். <<18388915>>நேற்று அரசியலில் இருந்து<<>> விலகுவதாக அறிவித்த அவர், இன்று இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். GK வாசனின், தமாக தற்போது NDA கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஏற்கெனவே, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.


