News August 9, 2025
SSMB29.. இயக்குநர் ராஜமெளலி கொடுத்த மெகா அப்டேட்!

இன்று மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பட அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏமாற்றியுள்ளார். இன்று எந்த வித அப்டேட்டும் வராது என தெளிவாக குறிப்பிட்ட அவர், வரும் நவம்பரில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என X தளத்தில் போஸ்டர் ஒன்றுடன் தெரிவித்துள்ளார். அதில், மகேஷ் பாபு கழுத்தில் உள்ள செயினில் சிவனின் திரிசூலம், உடுக்கை, காளை ஆகியவை இருக்கின்றன.
Similar News
News August 9, 2025
தேவகவுடா ஃபார்முலாவை கையில் எடுக்கும் அன்புமணி?

60 MLA-க்கள் கிடைத்தால் பாமக ஆட்சியமைக்கும் என அன்புமணி பேசியது சாத்தியமா? கர்நாடகாவில் மாண்டியாவில் மட்டும் வலுவாக உள்ள JD(S) 37 சீட் மட்டும் வென்று ஆட்சியமைத்திருக்கிறது. அதுபோல, வட தமிழகத்தில் வலுவான தொகுதிகளை குறிவைத்து வென்றால், 2026-ல் தொங்கு சட்டசபை அமையும்பட்சத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது பாமக திட்டம். எதிர்பார்க்கும் சீட்கள் அதிகம் என்பதால் தவெகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது.
News August 9, 2025
அப்பாவை நினைத்து கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்

ரி-ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் தந்தை விஜயகாந்தை எண்ணி மேடையிலேயே விஜய பிரபாகரன் கண்ணீர் வடித்தார். நா தழுதழுக்க பேசிய அவர், தனக்கு MP பதவி எல்லாம் முக்கியமல்ல என்றும் விஜயகாந்தின் மகன் என்பதே முக்கியம் எனவும் உருக்கமாக குறிப்பிட்டார். தந்தையை மிஸ் பண்ணுவதாலேயே அவர் இறந்து ஓராண்டாகியும் அழுவதாக விஜய பிரபாகரன் பேசினார்.
News August 9, 2025
அரசு ஊழியர்களுக்கு 3% சம்பள உயர்வு?

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான
ஜூலை-டிசம்பர் மாதத்துக்கான அகவிலைப்படி தீபாவளிக்கு முன்னதாக உயரக்கூடும் என தகவல்கள் உள்ளன. இதன்மூலம் 55% இருந்த அகவிலைப்படி 3% சதவீதம் உயர்ந்து 58% வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படுகிறது. முன்னதாக ஜனவரியில் 2% உயர்ந்ததால் 53% இருந்த அகவிலைப்படி 55% ஆனது.