News August 15, 2024
SSLV-D3 ராக்கெட் கவுண்டவுன் இன்று தொடக்கம்

பூமி கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோள், SSLV-D3 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த EOS-08 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட உள்ளது. இது பூமியில் இருந்து 475 கி.மீ உயரத்திலும் 37.4 டிகிரி சாய்விலும் நிலை நிறுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
சிவகங்கை: புதிய வாக்காளரா நீங்க.? இங்க பதிவு பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் 01.01.2026 ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது<
News November 23, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் நெருங்குவதால், ஒருபுறம் பரப்புரை & கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கரூர் தொகுதியின் தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளான யுவராஜ், குபேரன், சந்திரசேகரன், தினேஷ் , சசிகுமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News November 23, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் விலை குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹4 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹94-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.


