News November 10, 2025

SSLC தகுதி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் 542 வேலை!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-வது, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25 வரை. சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 10, 2025

சுதந்திரம் அடைவதற்கு முன்பே இவை நாட்டில் பேமஸ்!

image

இன்று பிரபலமாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள பிராண்டுகள் அனைத்தும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தொடங்கப்பட்டு விட்டன. இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பலதும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களாகும். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். மேலே குறிப்பிடப்பட்டதில், உங்களுக்கு மிகவும் பிடிச்சது எது?

News November 10, 2025

போர் நிறுத்தம்: டிரம்புக்கு மீண்டும் பாக்., நன்றி

image

இந்தியா – பாக்., போரை நிறுத்திய டிரம்புக்கு பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி கூறியுள்ளார். டிரம்ப்பின் துணிச்சல், உறுதியான தலைமையினால்தான் இந்தியா – பாக்., இடையிலான போர் தவிர்க்கப்பட்டு, பல லட்சம் மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் தலையீட்டால் போர் நிறுத்தம் என்ற வாதத்திற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2025

மனநலம் குன்றியவர் ஆர்.பி.உதயகுமார்: டிடிவி

image

விரக்தியின் உச்சத்தில் இருப்பதால்தான் ஆர்.பி.உதயகுமார் தன்னை விமர்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மனநலம் குன்றியவர் போல பேசுவதாக கூறிய அவர், அதனால் பாவம் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என கிண்டலடித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பாஜக முயற்சிப்பதாகவும், கட்சியை பிரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!