News December 6, 2024
SSLC தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2025 ஏப்ரலில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இன்று(டிச.,6) முதல் அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வியானவர் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள் 17.12.24; தேர்வு கட்டணம் மொத்தம் ரூ.195; கூடுதல் தகவல்களை dge.tn.gov.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.
News November 21, 2025
குமரி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <


