News July 1, 2024
ஸ்ரீலீலாவுக்கு பிடித்த நடிகை நயன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பால கிருஷ்ணா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் ‘குர்ச்சி மடதாபெட்டி’ என்ற பாடலுக்கு அவர் போட்ட நடனம் உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா, தமிழில் தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்று கூறியுள்ளார்.
Similar News
News September 20, 2025
AI மூலம் UPSC தேர்வர்களின் அடையாளம் சரிபார்ப்பு

UPSC தேர்வுகளின் போது தேர்வர்களின் முக அடையாளங்களை உறுதிப்படுத்த AI மூலம் சோதனை செய்யும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது. சமீபத்தில் குருகிராமில் நடந்த தேர்வில் இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்வர்களின் அடையாளங்களில் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதாகவும், தேர்வர்களின் சரிபார்ப்பு நேரத்தை 8-10 விநாடிகள் அளவு குறைப்பதாகவும் UPSC தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த தேர்வுகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
News September 20, 2025
ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை

தவெக தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய விஜய், மிரட்டி பார்க்குறீங்களா CM சார் என கேள்வி எழுப்பினார். மேலும், ‘பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார், நீங்களா இந்த விஜய்யா என பார்த்துக் கொள்வோம்’ என எச்சரிக்கும் தொனியில் அவர் பேசினார். 2026-ல் TVK, DMK இடையேதான் போட்டி எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
நாளை சூரிய கிரகணத்தை பார்க்க முடியுமா?

நாளை(செப்.21) சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு 10:59-ல் தொடங்கி அதிகாலை 3:23-க்கு முடிவடைகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் நிலவு சூரியனின் 85% பரப்பை மறைக்கும். ஆனாலும், கிரகணம் இரவில் வருவதால் இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், பூமியின் தென்கோளத்தில் அமைந்துள்ள நியூசி., கிழக்கு ஆஸ்திரேலியா, தென் பசிபிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இது தெரியும்.