News October 22, 2025
ஸ்ரீலீலா தான் நேஷனல் கிரஷ்: ரன்வீர் சிங்

ஸ்ரீலீலா தான் உண்மையான நேஷனல் கிரஷ் என நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அவரது ஒழுக்கம் மற்றும் திறமை ஆசாத்தியமானது எனவும், ஸ்ரீலீலாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடஇந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அட்லீயின் விளம்பர படத்தில் நடித்திருந்தனர்.
Similar News
News January 19, 2026
ராசி பலன்கள் (19.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 19, 2026
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், திவ்யா கணேசன் டைட்டில் வின்னராக உருவெடுத்துள்ளார். 28-வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த இவர், வீட்டில் நடந்த பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸில் மகுடம் சூடியுள்ளார். இவரது திறமைக்கு விரைவிலேயே கோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News January 18, 2026
விஜய்க்கு அபரிமித செல்வாக்கு உள்ளது: கிருஷ்ணசாமி

விஜய் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பார் என்பதைவிட, அவரே ஒரு சக்தியாக மாறுவார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய்யால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதை கூற முடியவில்லை என்றாலும், அவர் அபரிமிதமான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை தூக்கி வீசினாலும், அது அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.


