News July 8, 2025
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

<<16954955>>போதை பொருள் வழக்கில்<<>> கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ₹10,000 சொந்த ஜாமினிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News July 8, 2025
டெக்சாஸை மூழ்கடித்த பெரு வெள்ளம்… 104 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
News July 8, 2025
இரவு 10 மணிக்கு என்ன நடக்கப் போகிறது?

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.