News May 1, 2024
இந்திய அணியை குப்பை என விமர்சித்த ஸ்ரீகாந்த்

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை குப்பையான தேர்வு என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “சிலரை திருப்திப்படுத்த தேர்வுக்குழு இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக, நியாயமற்ற காரணத்தை சொல்லி ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கியுள்ளது. தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்தியாவுக்காக ரிங்கு அசத்தியவர்” எனக் கூறினார்.
Similar News
News January 28, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,960 உயர்வு

கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சம் பெற்ற தங்கம் விலை நேற்று குறைந்தது. இந்நிலையில், மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹370 உயர்ந்து ₹15,330-க்கும், சவரன் ₹2,960 அதிகரித்து ₹1,22,640-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 28, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் STR படம்!

*STR பிறந்தநாளை முன்னிட்டு, ‘சிலம்பாட்டம்’ படம் பிப். 6-ம் தேதி ரீ-ரிலீசாகவுள்ளதாம் *துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளதால், அது ‘சீதாராமம் 2’ படமாக இருக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது *‘Grandma’S Magic’ என்ற ஊறுகாய் கம்பெனியை சீரியல் நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் தொடங்கியுள்ளார் *பெரும் வெற்றிபெற்ற ‘அனிமல்’ படத்தின் பார்ட் 2, 2027-ல் தொடங்கவுள்ளதாம்.
News January 28, 2026
தொகுதிப் பங்கீடு விவகாரம்.. ராகுலை சந்திக்கும் கனிமொழி

கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே வார்த்தைப்போர் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தியை கனிமொழி நேரில் சந்திக்க உள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் அவர், தொகுதி பங்கீட்டில் திமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுகவிடம் காங்., வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


