News August 13, 2024
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள், நாட்டுப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். ஏற்கெனவே, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
ராணிப்பேட்டை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

ராணிப்பேட்டை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News March 10, 2026
விஜய்யுடன் கூட்டணி.. DCM பதவி கேட்கிறாரா சசிகலா?

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் நோக்கில் புதிய கட்சியை தொடங்குவதாக கூறிய சசிகலா, வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுகிறார். சசிகலாவின் உறவினரான ஜெய் ஆனந்த், தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் போட்டியிட கணிசமான தொகுதிகளுடன், DCM பதவியையும் தவெகவிடம் டிமாண்டாக சசிகலா தரப்பு வைத்துள்ளதாம். இதுபற்றி விஜய் ஆலோசிக்கிறாராம்.
News March 10, 2026
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்த உத்தரவு

+2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளது. அதன்படி, *பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது.


