News March 20, 2025

இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. 11 மீனவர்கள் கைது

image

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.

Similar News

News September 18, 2025

‘புலி’ டைரக்டருடன் இணையும் விமல்

image

இயக்குநர் சிம்புதேவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஃபைனான்சியருடன் இணைந்து சிம்புதேவனே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக, இயக்கிய ‘போட்’ தோல்வியடைந்ததால், பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சிம்புதேவனின் ஆசை பாழான நிலையில், தற்போது விமல் இணைந்துள்ளார்.

News September 18, 2025

உலகின் உயரமான Top 10 கட்டடங்கள்!

image

பொதுவாக உயரமான கட்டடங்களை பார்க்கும் போது எப்போதுமே வியப்பாகத்தான் இருக்கும். வானை எட்டும் உயரத்துக்கு இருக்கிறதே, எப்படி கட்டியிருப்பார்கள் என்றெல்லாம் மலைத்து நின்று இருப்போம். உலகின் உயரமான டாப் 10 உயரமான கட்டடங்களின் போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களை கவர்ந்தது எது என்பதை கமெண்ட் செய்யுங்கள். லைக் செய்தும் உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள்.

News September 18, 2025

காலையில் வெடிக்க போகும் அரசியல் பூகம்பம்!

image

ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஆனால், எந்த விவகாரம் குறித்து பேச உள்ளார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. இருப்பினும், 2 மாநிலங்களில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் ஒரு High Profile லோக்சபா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!