News March 20, 2025
இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. 11 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிவிட்டார். ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.
Similar News
News March 20, 2025
மணிப்பூர் செல்லும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
News March 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 212
▶குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
▶பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
News March 20, 2025
இன்றைய (மார்ச் 20) நல்ல நேரம்

▶மார்ச் – 20 ▶பங்குனி – 06 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.