News July 26, 2024

இலங்கை மகளிர் அணி த்ரில் வெற்றி

image

இன்று நடந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் PAK அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய SL அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஞாயிற்று கிழமை இரவு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

Similar News

News March 16, 2026

அதிகாலையில் என்கவுன்டர்.. தமிழகத்தில் பரபரப்பு

image

சென்னை, மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடந்த என்கவுண்டரில் ரவுடி தொப்பை கணேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜன.30-ம் தேதி ₹25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை தொடர்பான வழக்கில் கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டதில் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கணேஷின் உடல் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடலில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

வேல்முருகனிடம் திமுக சமரச பேச்சுவார்த்தை

image

கூடுதல் சீட் , தங்களின் <<19389138>>10 கோரிக்கைகளை <<>>ஏற்றுக்கொண்டால் மட்டுமே திமுக கூட்டணியில் தொடருவோம்; இல்லையென்றால் 2 நாளில் கூட்டணி மாறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என <<19389138>>வேல்முருகன் <<>>கூறியிருந்தார். இதனையடுத்து, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை தடுக்க திமுக தலைமை சார்பில் மூத்த அமைச்சர்கள் செல்போனில் அழைத்து வேல்முருகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 16, 2026

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் KN நேரு

image

மீண்டும் திமுக ஆட்சி அமைய அதிகாரிகள் துணை நிற்க வேண்டும் என KN நேரு பேசியது சர்ச்சையாகியுள்ளது. முசிறியில் பேசிய அவர், பணி நிமித்தமாக சில நேரங்களில் அரசு அதிகாரிகளிடம் கடுமையாக பேசியிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். இதனிடையே, அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக முயல்வதாகவும், அதனை ECI கண்காணிக்க வேண்டும் எனவும் அதிமுக, பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!