News August 8, 2024
சதமே இல்லாத இலங்கைத் தொடர் !

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டி20, ODI தொடர்களில் இரு அணி வீரர்களும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டி20 போட்டித் தொடரில் இலங்கை வீரர் நிசாங்கா அதிகபட்சமாக முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் 58 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் தொடரில், 3ஆவது போட்டியில் அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களும், 2வது போட்டியில் ரோஹித் 64 ரன்களும் எடுத்தனர்.
Similar News
News November 28, 2025
WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?
News November 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை இன்று(நவ.28) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840-க்கும், சவரன் ₹94,720-க்கும் விற்பனையாகிறது. <<18408962>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று(₹240) போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
News November 28, 2025
காட்டுப்பூனைகளுக்கு எதிராக போரா?

‘காட்டுப்பூனைகளுக்கு எதிராக போர்’. கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? நியூசிலாந்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காட்டுப்பூனைகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, பூர்வீக உயிரினங்களை காக்க, 25 லட்சம் காட்டுப் பூனைகளை 2050-க்குள் ஒழிக்க போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை ‘கொடூர கொலையாளிகள்’ என அறிவித்துள்ள அரசு, நியூசிலாந்து ஒரு பெரிய சூழலியல் போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.


