News August 7, 2024

இலங்கை ODI தொடர்: சமன் செய்யுமா இந்தியா?

image

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை வென்று ODI தொடரை இந்தியா சமன் செய்யுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி, வெற்றி, தோல்வியின்றி முடிந்தது. 2வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. இந்நிலையில் இன்று நடக்கும் 3வது போட்டியில் இந்திய அணி வென்றால் தொடர் சமன் ஆகும். இல்லையேல், இலங்கை அணி தொடரை கைப்பற்றி விடும்.

Similar News

News December 4, 2025

இந்தியா தோல்விக்கு இதுதான் காரணமா?

image

358 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மார்க்ரம் 53 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறியதோடு, ரன்களையும் வாரி வழங்கினர். அர்ஷ்தீப், ஜடேஜா மட்டுமே SA பேட்டர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினர். SA அணியின் பேட்டிங் டெப்த்தையும் இந்தியா கணிக்க தவறிவிட்டது.

News December 4, 2025

20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.

News December 4, 2025

சனாதன தர்மத்தை பரப்ப வேண்டும்: பாலய்யா

image

பாலய்யா நடித்து வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘அகண்டா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசும்போது, சனாதன தர்மம் பற்றி அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தர்மத்திற்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம் எனவும் அதை இளைஞர்களுக்கு இந்த படம் கற்று கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!