News August 9, 2025

TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 9, 2025

BREAKING: தமிழ்நாட்டில் இந்த கட்சிகளுக்கு தடை

image

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 கட்சிகளை நீக்கி EC அறிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, மீனவர் மக்கள் முன்னணி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. வேறு எந்த கட்சிகளை நீக்க வேண்டுமென நினைக்கிறீங்க?

News August 9, 2025

தேவகவுடா ஃபார்முலாவை கையில் எடுக்கும் அன்புமணி?

image

60 MLA-க்கள் கிடைத்தால் பாமக ஆட்சியமைக்கும் என அன்புமணி பேசியது சாத்தியமா? கர்நாடகாவில் மாண்டியாவில் மட்டும் வலுவாக உள்ள JD(S) 37 சீட் மட்டும் வென்று ஆட்சியமைத்திருக்கிறது. அதுபோல, வட தமிழகத்தில் வலுவான தொகுதிகளை குறிவைத்து வென்றால், 2026-ல் தொங்கு சட்டசபை அமையும்பட்சத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது பாமக திட்டம். எதிர்பார்க்கும் சீட்கள் அதிகம் என்பதால் தவெகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது.

News August 9, 2025

அப்பாவை நினைத்து கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்

image

ரி-ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் தந்தை விஜயகாந்தை எண்ணி மேடையிலேயே விஜய பிரபாகரன் கண்ணீர் வடித்தார். நா தழுதழுக்க பேசிய அவர், தனக்கு MP பதவி எல்லாம் முக்கியமல்ல என்றும் விஜயகாந்தின் மகன் என்பதே முக்கியம் எனவும் உருக்கமாக குறிப்பிட்டார். தந்தையை மிஸ் பண்ணுவதாலேயே அவர் இறந்து ஓராண்டாகியும் அழுவதாக விஜய பிரபாகரன் பேசினார்.

error: Content is protected !!