News January 9, 2025
10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் படகில் காரைக்கால் அருகே கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 10 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காங்கேசன் துறைக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
Similar News
News January 21, 2026
புவிசார் குறியீடு: 2-வது இடத்தில் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இதுவரை 74 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்றதில், இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 74 பொருட்களில் கைவினைப் பிரிவில் – 38, உணவுப் பிரிவில் – 9, உற்பத்திப் பிரிவில் – 3, விவசாயப் பிரிவில் – 24 என கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் 77 பொருள்களுடன் முதலிடத்தில் உள்ளது.
News January 21, 2026
மோடி வருகிறார்.. மாற்றம் ஏற்படும்: தமிழிசை

2026 தேர்தல் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 23-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை, தமிழக அரசியலில் ஏற்பட உள்ள மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்று கூறினார். PM மோடி, மதுராந்தகத்தில் நடைபெறும் NDA கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.
News January 21, 2026
இந்தியா – நியூசிலாந்து முதல் T20

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது. முதல் போட்டி இன்றிரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், T20 தொடர் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்திய அணி, இந்த T20 தொடரை வென்று அசத்துவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


