News July 10, 2025
வங்கதேசத்துக்கு பதில் இலங்கை? பிசிசிஐ முடிவு

இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சென்று ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை சென்று 3 ODI, 3 T20கள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் உள்ளன. இருகிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், ஆகஸ்ட்டில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.
Similar News
News July 10, 2025
KGF-க்கு பிறகு இப்படி ஒரு எண்ணம் உள்ளது: Sam CS

KGF படத்துக்குப் பிறகு, இசையை சத்தமாக வைத்தால் காட்சி தப்பித்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாக சாம் CS கூறியுள்ளார். இவரது இசை சத்தமாகவும், இரைச்சலாகவும் உள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கு ‘ட்ரெண்டிங்’ பட விழாவில் பதிலளித்த அவர், ஒரு படத்திற்கு இசையமைத்த பிறகு சவுண்ட் எஃப்க்ட்ஸ், வசனங்களை வைத்து ஒரு Output வரும், அதற்கும் இசையமைப்பாளர்களுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
News July 10, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 10) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,020-க்கும், சவரன் ₹72,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 10, 2025
BREAKING: காலையில் குலுங்கிய தலைநகரம்!

தலைநகர் டெல்லியில் காலை சரியாக 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் ரோத்தக் என்ற பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், மீரட் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.