News March 23, 2025
SRH vs RR: சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!

ஹைதராபாத்தில் நடைபெறும் SRH அணிக்கு எதிரான போட்டியில் RR அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் Impact வீரராக களமிறங்குகிறார். பேட்டிங்கில் மிரட்டும் SRH அணி இந்த போட்டியில் எவ்வளவு ரன்களை குவிக்கும் என நினைக்குறீர்கள்?
Similar News
News March 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் எண்: 218
குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
News March 26, 2025
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் அத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாகவும் தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.
News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.