News March 27, 2024
SRH Vs MI: முதல் வெற்றியை பெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான SRH & MI அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் SRH 9 முறையும், MI 12 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் SRH & MI அணிகள் நேரடியாக மோதும் முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.
Similar News
News February 8, 2026
பிப்ரவரி 8: வரலாற்றில் இன்று

1936 – ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1971-ல் உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தையான NASDAQ தொடங்கப்பட்டது
தேசிய சிறுவர் சாரணர் தினம் – பிப்ரவரி 8
1897 – இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ஜாகிர் உசேன் பிறந்த நாள்.
1963- இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி முகமது அசாருதின்
1964 – இயக்குநர் சந்தோஷ் சிவன் பிறந்த தினம்
News February 8, 2026
ஏழை எளிய மக்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள், தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெற்றுக்கொள்ள அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களை ஒட்டியுள்ள ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் நில ஆவணங்களுடன் உரிய வருவாய்த் துறை அலுவலகங்களை அணுகி, பிப்.28-க்குள் விண்ணப்பித்து, நில உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
News February 8, 2026
இந்திய அணி வரலாறு படைக்கிறது

அமெரிக்காவை வென்றதன் மூலம், T20 WC-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. 2024 முதல் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தெ.ஆப்.,வை (2024-ல் 8 வெற்றிகள்) முந்தியுள்ளது. ஒருநாள், T20 போட்டிகள் உட்பட WC-ல் ஒட்டுமொத்தமாக 100 வெற்றிகளை இந்திய அணி நிறைவு செய்துள்ளது. ஆஸி.,க்கு பிறகு (108) இந்த சாதனையை எட்டிய 2-வது அணி இந்தியா.


