News May 16, 2024
ப்ளே ஆஃப் சுற்றுக்கு SRH அணி முன்னேறாது!

நடப்பு ஐபிஎல் தொடரில் SRH அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “SRH அணி அடுத்த 2 போட்டிகளில், தோற்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். KKR, CSK, RCB, RR ஆகிய 4 அணிகள் ப்ளே ஆஃப்க்கு முன்னேறலாம்” என்றார். இந்த சர்ச்சைக் கருத்தால் சீற்றமடைந்த SRH அணியின் ரசிகர்கள் கடும் சொற்களால் அவரை அர்ச்சித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 533 ▶குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ▶பொருள்: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
News November 28, 2025
Gen Z தலைமுறையை நெகிழ்ந்து பாராட்டிய PM மோடி

இந்திய இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவன வளாகத்தை திறந்து வைத்து பேசிய அவர், இன்று Gen Z பொறியளார்கள், வடிவமைப்பாளர்கள், Coding பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள், ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் ஆகியவற்றிலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
News November 28, 2025
தோனியும் பவுமாவும் ஒன்று: ஏபி டி வில்லியர்ஸ்

தோனியின் கேப்டன்சி பற்றி SA வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியது வைரலாகிறது. கேப்டன்சியை கையாள்வதை பொறுத்தவரை டெம்பா பவுமா, தோனியை போன்றவர் என அவர் கூறியுள்ளார். தோனி எப்படி அமைதியாகவும், அதிகம் பேசாதவராகவும், அவர் பேசும்போது அணியின் வீரர்கள் எப்படி கவனிப்பார்களோ, அப்படித்தான் பவுமாவும் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். தோனியின் பெஸ்ட் கேப்டன்சி மொமண்ட் எது?


