News May 24, 2024

இறுதிப்போட்டிக்கு சென்றது SRH அணி

image

RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில், SRH அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் RR அணி களமிறங்கியது. துருவ் ஜுரலை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, அந்த அணி தடுமாறியது. 20 ஓவரின் முடிவில் வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. இந்த வெற்றியின் மூலம், மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு SRH அணி முன்னேறியது.

Similar News

News March 10, 2026

கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.

News March 10, 2026

பாஜகவின் வக்கிரமான அரசியல்: நாஞ்சில் சம்பத்

image

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அதை விஜய் எதிர்கொள்வார் எனக் கூறிய அவர், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகவும், அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு அவசர ஆலோசனை

image

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். TN-ல் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!