News March 23, 2025
முதல் போட்டியிலேயே சாதனை படைத்த SRH!

SRH அணி, தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்துள்ளது. 286/6 ரன்களை குவித்து அந்த அணி, IPLல் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை ஒரு IPL போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 287/3. இதையும் SRH தான் அடித்துள்ளது. இந்த போட்டியில், இஷான் கிஷன் 106(47), ட்ராவிஸ் ஹெட் 67(31), கிளாசன் 34(14) என அதிரடியாக ரன் குவித்தனர். இந்த ஸ்கோரை RR அடிக்குமா?
Similar News
News March 25, 2025
டெல்லிக்கு ₹1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்!

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில பேரவையில் CM ரேகா குப்தா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ₹1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், டெல்லியில் நீடித்திருந்த ஊழல் மற்றும் திறனற்ற சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட, இது 31.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2025
கொடூர மனைவிகளுக்கு எதிராக ‘புருஷா கமிஷன்’ வருமா?

சமீபகாலமாக, குடும்ப பிரச்னைகளில் ஆண்களும் பாதிக்கப்படும் செய்திகள் வருகின்றன. ஆண்களை பாதுகாக்க யாருமே இல்லையா என்பவர்களுக்கு, ‘புருஷா கமிஷன்’ பற்றி தெரியுமா? கொடூரமான மனைவிகளிடம் இருந்து காக்க, 2018ல் ஆந்திர மகிளா கமிஷனின் தலைவி ராஜகுமாரி இக்கோரிக்கையை வைத்தார். ஆனால், மாதர் சங்கங்கள் இதை எதிர்க்க, கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த சங்கத்திற்கு உயிர் கொடுக்கலாமே! என்ன சொல்றீங்க?
News March 25, 2025
கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

உ.பி. மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் கொலை செய்த வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே போன்ற மற்றொரு சம்பவம் அதே மாநிலத்தில் நடந்துள்ளது. ஆரையா நகரில் திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் கணவர் திலீப்பை கொலை செய்த மனைவி பிரகதி, காதலருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே வேறொருவரை காதலித்து வந்த அவர், ரூ.2 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை தீர்த்துக் கட்டியுள்ளார்.