News November 24, 2024
இஷான் கிஷனை தட்டி தூக்கிய SRH

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலம் தொடங்கியதும் அவரை ஏலத்தில் எடுக்க மும்பை, டெல்லி, பஞ்சாப் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இஷான் கிஷனை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துவிட்டோம் என்ற நினைத்தபோது கடைசியாக வந்த SRH இறுதியில் அவரை தட்டி தூக்கியது.
Similar News
News January 10, 2026
JMM போல் திமுக முடிவு எடுக்குமா?

கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேச வேண்டாம் என செல்வப்பெருந்தகை எச்சரித்த போதும், ‘ஆட்சியில் பங்கு’ முழக்கத்தை மீண்டும் மாணிக்கம் தாகூர் முன்வைத்துள்ளார். ஜார்க்கண்ட் அமைச்சரவையில் காங்., கட்சியினர் 4 பேர் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது சட்டமன்ற வலிமையை அடிப்படையாக கொண்ட நியாயமான அதிகார பகிர்வின் பிரதிபலிப்பு; இதுதான் மிகச் சிறந்த மற்றும் நிலையான கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.
News January 10, 2026
உலகக் கோப்பை அணியில் இடமில்லை.. மனம் திறந்த கில்!

T20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து முதல் முறையாக ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார். தேர்வாளர்களின் முடிவை மதிப்பதாக தெரிவித்த அவர், உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்குத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் தனது சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிப்பார்கள்; ஆனால் அணியைத் தேர்ந்தெடுக்கும் முடிவு தேர்வாளர்களை பொறுத்தது என அவர் குறிப்பிட்டார்.
News January 10, 2026
BREAKING: விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு

சென்சார் பிரச்னையால், ‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ படம் பொங்கலையொட்டி ஜன.15-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகனுக்கு பதில் தெறி வெளியாவதால், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


