News April 13, 2025
SRH IN IPL HISTORY BOOKS

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்ததால் SRH கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஆனால், அந்த விமர்சனத்திற்கு PBKS-க்கு எதிரான இன்றைய போட்டியில் சரியான பதிலடி கொடுத்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறிய SRH, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த 2வது அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
Similar News
News January 3, 2026
வீரச்சுடர் வேலுநாச்சியாருக்கு மரியாதை

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேலுநாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடரே வேலுநாச்சியார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News January 3, 2026
பார்வை இல்லாதவர்களுக்கும் இனி பார்வை கிடைக்கும்!

பிறவியிலேயே பார்வை இழந்த, வாய் பேசமுடியாதவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் புத்தாண்டு நற்செய்தி தெரிவித்துள்ளார். பார்வை மற்றும் குரலை மீட்டு தருவதற்கான சாதனங்களுக்கு FDA அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூளையில் சிப் பொருத்தப்பட்டு, பார்வை நரம்புகளின் வேலை செய்யப்படும். அதேபோல், மூளை நினைப்பதை கம்பியூட்டர் பேசும். இதற்கான பரிசோதனை உலகம் முழுவதும் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
பொங்கல் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. *போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சலூட்டும் மருந்துகள் கொடுக்கக் கூடாது. *காயமடைந்தவர்களுக்கு முறையாக முதலுதவி அளிக்கப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். SHARE IT.


