News August 4, 2024
பாராட்டுகளை குவிக்கும் ஸ்ரீஜேஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி காலிறுதி போட்டியில் பல கோல்களை தடுத்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல முக்கியப் பங்காற்றிய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை பெனால்டி ஷூட் அவுட்க்கு கொண்டு சென்று, அதிலும் 2 கோல்களை தடுத்து வெற்றி பெற செய்தார். நடப்பு ஒலிம்பிக் உடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
டெட் ரிசல்ட்டை உடனே வெளியிடுங்க: அன்புமணி

முதுநிலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல், டெட் தேர்வு முடிவுகளை TRB உடனே வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால், இந்த தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளிவிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் ஆகியும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியமே என்று குற்றம் சாட்டினார்.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. பொங்கல் நாளில் அஞ்சலி

ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரமோத்துடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் சங்கராந்தி நாளில், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், பிரமோத்தின் போட்டோவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரமோத் உடலுக்கு அவரது மனைவி <<18829931>>ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி<<>> செலுத்தியிருந்தார்.
News January 15, 2026
தமிழ் Biggboss-ன் அடுத்த Host இவரா?

டைரக்ஷனுக்கு கொஞ்சம் பிரேக் விட்டுவிட்டு தற்போது நடிப்பு, TV ஷோக்களின் நடுவர் என படு பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இந்நிலையில், பலரும் விரும்பி பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த ஷோவின் அடுத்த தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு கிடைக்கலாம் என பேசப்படுகிறது. பிக்பாஸை மிஷ்கின் Host செய்தால் எப்படி இருக்கும்?


