News November 23, 2025
Squid Game USA வெர்ஷன்: புதிய அப்டேட்

தென் கொரிய தொடரான ‘Squid Game’ உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், புதிய கதைக் களம், கதாபாத்திரங்களுடன் இதன் அமெரிக்க வெர்ஷன் உருவாகவுள்ளது. இந்த வெர்ஷனை Fight Club, Panic Room போன்ற பேமஸ் படங்களை இயக்கிய David Fincher தான் இயக்குகிறார். இவருக்கு கிரியேட்டிவ் சப்போர்ட்டாக Squid Game இயக்குநர் Hwang Dong-hyuk பணியாற்ற உள்ளார். இதன் படப்பிடிப்பு 2026 பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.
Similar News
News November 24, 2025
போனை திருடியவரை இப்படி ஈஸியா கண்டுபிடிக்கலாம்

உங்கள் போன் திருடுபோனால் எளிதில் கண்டுபிடிக்க சில ஆப்கள் உள்ளன. Bitdefender, Cerberus, Prey ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, பர்மிஷன்களை கொடுத்துவையுங்கள். உங்கள் போனை திருடியவர் SIM-ஐ மாற்றினாலோ, SWITCH OFF செய்ய முயற்சித்தாலோ (அ) தப்பான Password-ஐ உள்ளிட்டாலோ இச்செயலிகள் உடனடியாக Selfie எடுப்பதோடு, லொகேஷனையும் உங்களுக்கு SHARE செய்யும்.
News November 24, 2025
மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா? வந்தது அப்டேட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் விடுமுறை அளிக்காத மாவட்டங்களுக்கு மதியத்திற்குமேல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
சற்றுமுன்: புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்புரையின்போது விஜய் தாமதமாக வந்தாரா, பரப்புரை நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா, சம்பவம் நடந்தபோது அங்கிருந்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.


