News April 4, 2025
பாலியல் வழக்கில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்

நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘ஸ்குவிட் கேம்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருப்பவர் 80 வயது தென்கொரிய நடிகர் ஓ இயோங்-சு. ஆனால், தனது 80 ஆண்டு வாழ்க்கையில் சேர்த்த நல்ல பெயர், ஒரே கணத்தில் பாழாகிவிட்டதாக இவர் புலம்புகிறார். காரணம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டு வன்கொடுமை செய்த வழக்கில், அந்நாட்டு கோர்ட் இவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Similar News
News April 12, 2025
உசைன் போல்ட்டின் பொன்மொழிகள்

⁎பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். ⁎மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது கருத்தே இறுதியானது. ⁎நான் என்ன செய்தாலும் அதில் மட்டுமே என் முழு கவனமும் இருக்கும். ⁎உங்களுக்கு என்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டும். ⁎உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
News April 12, 2025
CSK பிளேஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த CSK, பிளேஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் 7ல் CSK வெற்றி கண்டால் அது சாத்தியம். ஆனால் அந்த அணியின் பேட்டிங்கை பார்த்தால் அதற்கு ‘வாப்பில்லை ராஜா’ என்றே சொல்ல தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை.
▶குறள் எண்: 304 ▶குறள்:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
▶பொருள்: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.