News October 27, 2025
Sports Roundup: ஓய்வு பெற்றார் ஷோபி டிவைன்

*நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஷோபி டிவைன் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு.
*இன்று தொடங்குகிறது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள்.
*ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்கிக்.
*ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழகம் – ஹைதராபாத் மோதல்.
Similar News
News October 27, 2025
‘சார்பட்டா பரம்பரை 2’: அப்டேட் கொடுத்த ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி OTT-யில் நேரடியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’, ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி, பணிகள் தொடங்காமலேயே இருந்தது. ஆர்யா, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த படம் முடிந்ததும், ‘சார்பட்டா பரம்பரை 2’-க்கான பணிகள் தொடங்கும் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
TN அரசிடம் திருமா வைத்த கோரிக்கை

ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்றதால் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், குகேஷுக்கு ₹5 கோடி, கார்த்திகாவுக்கு ₹25 லட்சம் தானா என திமுக அரசை எதிர்நோக்கி கேள்விகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையை ₹1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக சார்பில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
News October 27, 2025
தங்க நகை: இப்படியொரு கட்டுப்பாடா?

கல்யாண வீடுகள்ல பெண்கள் நிறைய தங்க நகைகள் அணிவதற்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி அணியலாம். ஆனால் ஆடம்பரமாக அதிக அளவு நகைகள் போட்டுட்டு வந்தா ₹50 ஆயிரம் ஃபைன். ஏன் தெரியுமா? பணக்காரங்கள பார்த்து ஏழைகளும் நகைகள் சேர்க்க கடன் வாங்கி சிரமப்படுவதால இப்படி ஒரு கட்டுப்பாடாம். உத்தராகண்ட்ல இருக்குற இந்த கந்தார் கிராமத்த இந்தியாவே வியந்து பாக்குது.


