News October 11, 2025
Sports Roundup: மும்பை அணிக்கு கேப்டன் ஷர்துல் தாக்கூர்

*3 வடிவிலான கிரிக்கெட்டிலும் 50 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். *மகளிர் CWC-ல் இன்று இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. *ரஞ்சி கோப்பையில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். *புரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ், புனேரி பல்தான்ஸ் அணிகள் மோதல். *ஆர்டிக் ஓபன் பேட்மிண்டனில் அன்மோல் கார்ப் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
Similar News
News January 20, 2026
ஆயுள் காப்பீடு எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது, பலரும் எவ்வளவு தொகைக்கு அதனை எடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. அதனை தீர்க்க ஈஸி கணக்கு ஒன்று உள்ளது. உங்களின் ஆண்டு வருமானத்தை விட ஆயுள் காப்பீடு 10 மடங்கு இருக்க வேண்டும். அதாவது, ஆண்டு வருமானம் ₹10 லட்சமாக இருந்தால், ₹1 கோடிக்கு காப்பீடு எடுக்க வேண்டும். ஒருவரின் இறப்பிற்கு பின், குடும்பம் பொருளாதாரச் நெருக்கடியில் சிக்காமல் தடுக்க ஆயுள் காப்பீடு உதவும்.
News January 20, 2026
Spiderman-ஆக மாறும் தனுஷ்?

சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘Avengers: Doomsday’ படத்தில் தனுஷ், Spiderman கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். Doomsday பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களின் ‘The Greyman’ படத்தில் தனுஷ் ஏற்கெனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Spiderman-ஆக எப்படி இருப்பார் தனுஷ்?
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் CPI

குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் கவர்னர் RN ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CPI அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், RN ரவியின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது; மாநில அரசின் உரையை வாசிக்காமல், சொந்த கருத்துகளை வெளியிட்டு மரபுகளை களங்கப்படுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, <<18768093>>காங்.,<<>> தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


