News October 7, 2025
Sports Roundup: களத்திற்கு திரும்பும் ரிஷப் பந்த்

*தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ரிஷப் பந்த் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடவுள்ளார். *மகளிர் உலக கோப்பையில், நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. *M15 வின்ஸ்டன் ஓபன் டென்னிஸில் இந்தியாவின் தக்ஷினேஷ்வர் சுரேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 36 – 28 என்ற புள்ளிகள் கணக்கில் உபி யோத்தாஸை வீழ்த்தியது.
Similar News
News October 7, 2025
லாரி இறக்குமதிக்கு 25% வரி விதித்தார் டிரம்ப்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அதிகளவு லாரிகளை ஏற்றுமதி செய்யும் கனடா, மெக்சிகோ இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்திய வாகன ஏற்றுமதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.
News October 7, 2025
ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

பிஹார் தேர்தல் முடித்த பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ராஜ்யசபா தலைவராக அமர உள்ள துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சுமூக உறவை ஏற்படுத்த விரும்புகிறார். அதன்படி இன்று மாலை அவரது அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
News October 7, 2025
தமிழக பிரபலம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார். அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி, சவுமியா அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். CM ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரின் இறுதி சடங்குகள் இன்று காலை 9 மணிக்கு மாடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளன.